Pages

Friday 3 April 2015

நன்னூல் -எழுத்ததிகாரம் வினாவிடையில் 3

Image result for உயிர்எழுத்து
நன்னூல் -எழுத்ததிகாரம் வினாவிடையில்

51) எழுத்துச் சாரியை என்றால் என்ன?
i) தனி மெய்கள் ‘அ’ என்னும் சாரியையும்,
ii) உயிர் நெடில்கள் காரம் என்னும் சாரியையும்,
iii)ஐ, ஔ என்னும் இரண்டும் காரம், கான் என்னும் சாரியை பெறும்.
iஎ) உயிர்க்குறிலும், உயிர்மெய்க் குறிலும் காரம், கான், கரம் என்னும் மூன்று சாரியை பெறும்.

52) சந்தியக் கரம் என்றால் என்ன?
கூட்டெழுத்துக்களால் உருவாகும் எழுத்து சந்தியக் கரம் எனப்படும்.
ஐ எனும் நெட்டெழுத்து உருவாதல்
அகரத்தின் முன் இயும், யவின் மெய்யும் ஒத்துப் பொருந்தினால் ‘ஐ’ எனும் நெட்டெழுத்துப் பிறக்கும்.
(உ.ம்) அ+இ = ஐ, அ+ய்=ஐ
ஔ எனும் நெட்டெழுத்து உருவாதல்
அகரத்தின் முன் உவும், வவின் மெய்யும் தம்முள் ஒத்துப் பொருந்தினால் ‘ஔ’என்னும் நெட்டெழுத்து பிறக்கும்.
(உ.ம்) அ+உ=ஔ, அ+வ்=ஔ
53) மொழி முதல் வரும் எழுத்துக்கள் யாவை?
அ) பன்னிரண்டு உயிரெழுத்துக்களும், க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங எனும் பத்து உயிர்மெய் எழுத்துக்களும் முதலில் வரும்.
ஆ) இரண்டும் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும் மொத்த எழுத்துக்கள் 22 ஆகும்.

54) மொழிக்கு முதலில் வராத எழுத்துக்கள் யாவை?
i) உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும், ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள எனும் பதினொரு மெய்களும், குற்றியலுகரமும் மொழிக்கு முதலில் வராத எழுத்துக்கள் ஆகும்.
ii) மெய்யெழுத்து=11, உயிர் எழுத்து=12, குற்றியலுகரம்=1 ஆகிய 24 எழுத்துக்களும் மொழிக்கு முதலில் வராத எழுத்துக்கள் ஆகும்.
55) எழுத்துக்களின் மாத்திரை விளக்குக?
உயிரளபடை
உயிரளபடைக்கு மாத்திரை மூன்று ஆகும்.
நெட்டெழுத்து
நெட்டெழுத்துக்கு மாத்திரை இரண்டு ஆகும்.
ஒற்றளபடை, ஐகாரகுறுக்கம், ஔகார குறுக்கம்
இவை மூன்றுக்கும் மாத்திரை ஒன்று ஆகும்.
குற்றியலிகரம், குற்றியலுகரம்
இவை இரண்டிற்கும் மாத்திரை அரை ஆகும்.
மகரகுறுக்கம், ஆய்த குறுக்கம்
இவை இரண்டிற்கும் கால் மாத்திரை ஆகும்.

56) எய்தும் எகரம், ஒகரம் மெய்புள்ளி விளக்குக?
எல்லா எழுத்துக்களும் பல்வேறு வகைப்பட்ட எழுதி வழங்கும் பழைய வடிவினை உடையன. அது போன்று ‘எவும், ஒவும்’ என்னும் எழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் புள்ளியைப் பெற்றன.
எ.கா எ, ஒ, க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
முற்காலத்தில் எ, ஒ இரண்டும் எ, ஒ என்று புள்ளி வைத்து நெடிலெழுத்துக்களாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இவை இப்போது வழக்கில் இல்லை. இதனை மாற்றியவர் வீரமாமுனிவர் ஆவார்.
57) மகரகுறுக்கம் என்றால் என்ன?
‘ண’கரம் மற்றும ‘ன’கரத்திற்கு பின் குறுகியும் வகரத்தின் முன்னும் குறுகி வறும் மகரமெய் மகரகுறுக்கம் எனப்படும். இதற்கு மாத்திரை1/4 ஆகும்.
எ.கா
i) மருண்டம் - ணகரத்திற்கு பின் குறுகியது.
ii) போன்டம் - னகரத்தின் பின் குறுகியது.
iii) தரும் வளவன் - வ கரத்திற்கு முன் குறுகியது.
58) எழுத்துக்களின் பிறப்பிடம் யாது?
Image result for எழுத்து பிறக்குமிடம்
மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகிய நான்கு இடங்களையும் பொருந்தி, உதடு, நாக்கு, பல், வாய் ஆகிய நான்கு உறுப்புகளின் முயற்சியால் வேறு, வேறு எழுத்தாய் எழுத்துக்கள் பிறக்கிறது.
59) இனவெழுத்து என்றால் என்ன?
உயிர்+மெய் = முந்தல்
முதலெழுத்து இரண்டிரண்டு ஓரினமாக வருதல் இனவெழுத்து எனப்படும்.
உ.ம்
i) உயிரெழுத்து
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔஉ
ii) மெய்யெழுத்து
க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ற, ன என்பன இனவெழுத்து ஆகும்.
60) சாரியை பெறாத எழுத்துக்கள் யாவை?
உயிர்மெய் நெடில்கள் சாரியை பெறாது.
61) அளபெடை என்றால் என்ன?
செய்யுளில் ஓசையை நிறைவு செய்வதற்காக எழுத்துக்கள் அளபெடுப்பது அளபெடை ஆகும்.
i)செய்யுளிசை அளபெடை
ii)இன்னிசை அளபெடை
iii)சொல்லிசை அளபெடை
62) உடனிலை மெய் மயக்கத்தில் வராத மெய்கள் யாவை?
Image result for உயிர்எழுத்துக, ச, த, ப, ர, ழ என்னும் ஆறு மெய்களும் உடனிலை மெய் மயக்கத்தில் வராத மெய்கள் ஆகும்.
63) வேற்றுநிலை மெய் மயக்கத்தில் வராத மெய்கள் யாவை?
க,ச,த,ப என்னும் நான்கு மெய்களும் வேற்றுநிலை மெய் மயக்கத்தில் வராத மெய்கள் ஆகும்.
64) பதம் என்றால் என்ன? அதன் வகை யாது?
i) எழுத்துக்கள் ஒவ்வொன்றாகத் தனித்தோ அல்லது இரண்டு முதலாகத் தொடர்ந்தும் பிற பொருளைத் தருமானால் அது பதம் எனப்படும்.
வகை
பதம் இரண்டு வகைப்படும். அவை,
i)பகுபதம்
ii)பகாப்பதம்
65) பகாப்பதம் இலக்கணம் யாது?
ஒரு சொல்லை பிரிக்க முடியாததும், அப்படிப் பிரித்தால் பொருள் தராததும் பாகப்பதம் எனப்படும். (உ.ம்.) மரம்.
66) பகுதி என்றால் என்ன?
பெயர்ப்பகாபதம், வினைப்பகாபதம் ஆகியவற்றின் முதலில் நிற்கும் பகாப்பதங்களே பகுதிகள் ஆகும்.
(உ.ம்) பொன்னன்=பொன்+ன்+அன்
இதில் பொன் என்பது பகுதி.
67) ஏ, மீ, ஐ, சோ, தே  பொருள் கூறுக.
ஏ  அம்பு
 மீ  உயர்ந்த
ஐ  தலைவன்
சோ  அரண்
தே தேயம்
68) பகுபத உறுப்புகள் யாவை?

பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் எனும் ஆறும் பகுபத உறுப்புகள் ஆகும்.
(உ.ம்)  நடந்தனன் = நட+த(ந)+த+அன்+அன்.
69) மை ஈற்று பண்பு பெயர்களுக்குரிய விகுதிகள் யாவை?
சொல் நிலையில் பகாப்பதங்களாகவும், பொருள் நிலையில் பகுபதங்களாகவும் வரும் பண்புப் பெயர்கள் மை ஈற்றுப் பண்புப் பெயர்களுக்குரிய இயல்கள் ஆகும்.
(உ.ம்) செம்மை ஒ வெண்மை = நன்மை ஒ தீமை.
70) பகுபதம் எத்தனை எழுத்து முதல் எத்தனை எழுத்துக்கள் ஈறாக வரும்?
 உ.ம். கூனி, கூனன், குழையன், பொருப், அம்பலவன், அரங்கத்தான், உத்தராடத்தன், உத்திரட்டாதி
பகுபதம் இரண்டு எழுத்து முதல் ஒன்பது எழுத்து ஈறாக வரும்.

No comments:

Post a Comment